Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கிருஷ்ணகிரி மாவட்ட சந்தையில் வரத்து குறைவால் புளி விலை உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட சந்தையில் வரத்து குறைவால் புளி விலை உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட சந்தையில் வரத்து குறைவால் புளி விலை உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட சந்தையில் வரத்து குறைவால் புளி விலை உயர்வு

ADDED : மார் 25, 2025 01:09 AM


Google News
கிருஷ்ணகிரி மாவட்ட சந்தையில் வரத்து குறைவால் புளி விலை உயர்வு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட புளி சந்தைக்கு, புளி வரத்து குறைந்துள்ளதால், அதன் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில், ராஞ்சிக்கு அடுத்த படியாக, கிருஷ்ணகிரி பழையபேட்டையில், 2வது பெரிய புளி சந்தை கூடுகிறது. இங்கு பிப்., முதல் மே வரை புளி சீசன் இருக்கும். புளியை வாங்க, கன்னியாகுமரி, மதுரை, துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மற்றும் கேரளாவில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக, 10,000 டன்னுக்கு மேல் புளி உற்பத்தியாகிறது.

சீசன் காலங்களில், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் புளி சந்தை கூடும். இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் வியாபாரிகள் புளியை கொண்டு வருவர். கிருஷ்ணகிரி புளி

சந்தையின் விலையை வைத்துத்தான், இந்தியாவின் பெரிய புளி சந்தையான ராஞ்சி மற்றும் ஜபல்பூர் புளி சந்தைகளில், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கு, சிறு விவசாயிகள் மட்டுமின்றி, குத்தகைதாரர்களும் புளி கொண்டு வருவர்.

இது குறித்து கிருஷ்ணகிரி புளி வியாபாரிகள் கூறியதாவது: கடந்தாண்டு இறுதியில் புளிய மரத்தில் பூக்கள் பூத்த நேரத்தில் தொடர்ந்து, 3 மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நல்ல மழையால், பெரும்பாலான மரங்களில் பூக்கள் உதிர்ந்தன. இதனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு, 70 சதவீதம் மட்டுமே புளி வரத்து இருக்கும். புளி விளைச்சல் குறைவால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு கிலோவிற்கு, 5 முதல், 10 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. மூன்றாம் தரமான கொட்டைப்புளி கிலோ, 45 ரூபாய் வரை விலை போகிறது. 2ம் தரம் புளி, 50 முதல், 55 ரூபாய் வரையும், முதல் தரம் புளி, 55 முதல், 65 ரூபாய் வரையும், கொட்டை இல்லாத பூப்புளி, 100 முதல், 115 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us