தங்க பிஸ்கெட்டுடன்கோவை ஆசாமி கைது
தங்க பிஸ்கெட்டுடன்கோவை ஆசாமி கைது
தங்க பிஸ்கெட்டுடன்கோவை ஆசாமி கைது
ADDED : மார் 23, 2025 01:10 AM
தங்க பிஸ்கெட்டுடன்கோவை ஆசாமி கைது
பவானி:ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகரில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணியளவில், ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு வந்த ஒரு ஆம்னி பஸ்சை, தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சித்தோடு போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பேக்குடன் வந்த ஒருவரை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த பையில் அரை கிலோ எடையில் ஐந்து தங்க பிஸ்கெட், 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர், நான்கு மொபைல்போன் இருந்தது. கோவை,
சிங்காநல்லுாரை சேர்ந்த புகழ்வாசன், 50, என தெரிந்தது. தங்க பிஸ்கெட், அமெரிக்க டாலர் எப்படி கிடைத்தது? இவர் குருவியாக செயல்பட்டாரா அல்லது யாரையாவது ஏமாற்றிவிட்டு கடத்தி வந்தாரா, என்ற கோணத்தில், சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.