/உள்ளூர் செய்திகள்/சேலம்/ டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்ட முயற்சிபா.ஜ., - தி.மு.க.,வினர் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்ட முயற்சிபா.ஜ., - தி.மு.க.,வினர் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு
டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்ட முயற்சிபா.ஜ., - தி.மு.க.,வினர் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு
டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்ட முயற்சிபா.ஜ., - தி.மு.க.,வினர் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு
டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்ட முயற்சிபா.ஜ., - தி.மு.க.,வினர் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு
ADDED : மார் 23, 2025 01:22 AM
டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்ட முயற்சிபா.ஜ., - தி.மு.க.,வினர் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு
ஓமலுார்,:டாஸ்மாக் கடையில், பா.ஜ.,வினர், முதல்வர் படத்தை ஒட்ட வந்தபோது, அந்த படத்தை தி.மு.க., கவுன்சிலர் பறித்துச்சென்றதால், இரு கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பா.ஜ.,வினர் மதுக்கடை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால், 41 பேரை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச்சென்றனர்.
பா.ஜ., சேலம் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், ஓமலுார் அருகே பெரமச்சூர் மற்றும் தொளசம்பட்டி டாஸ்மாக் கடைகளில், முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டினர். தொடர்ந்து ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, மதியம், 1:00 மணிக்கு முதல்வர் படத்தை கையில் பிடித்தபடி, மாவட்ட துணைத்தலைவர் அருள் கிருஷ்ணன் தலைமையில், ஓமலுார் கிழக்கு ஒன்றிய தலைவர் ஜெயலட்சுமி உள்ளிட்ட மகளிர் அணியினர், ஊர்வலமாக
வந்தனர்.
அதேநேரம், தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் டவுன் பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் பிரகாஷ், தற்போதைய கவுன்சிலர்கள் அன்பழகன், வெங்கடேஷ், டாஸ்மாக் கடை முன் அண்ணாமலை படம் ஒட்ட வந்தனர். இரு தரப்பினரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது வெங்கடேசன், பா.ஜ., மகளிர் அணியை சேர்ந்தவர் கையில் இருந்த முதல்வர் படத்தை பறித்துச்சென்றார். மற்றொரு படத்தை பறிக்க முயன்றார். அப்போது, பா.ஜ., - தி.மு.க.,வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணியினர், நிர்வாகிகள், டாஸ்மாக் கடை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். போஸ்டரை பறித்த, தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிய கோஷம் எழுப்பினர். அரை மணி நேரம் பேச்சு நடத்தியும் பலன் இல்லாததால், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன், மகளிர் அணியினர் உள்பட, 41 பேரையும், போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி கைது செய்து, போலீஸ் சமுதாயக்கூடத்துக்கு அரசு பஸ்சில் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து ஓமலுார் டாஸ்மாக் விற்பனையாளர் செல்வம் புகார்படி, பா.ஜ.,வை சேர்ந்த, 16 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு பணியை தடுத்தல், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் உள்பட, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதில், 3 பேருக்கு உடல் நிலை பாதிப்பால், சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.