/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பா.ஜ., நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் திருடியவர் கைது பா.ஜ., நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் திருடியவர் கைது
பா.ஜ., நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் திருடியவர் கைது
பா.ஜ., நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் திருடியவர் கைது
பா.ஜ., நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் திருடியவர் கைது
ADDED : ஜூலை 24, 2024 07:38 AM
வாழப்பாடி, : சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளியில், பா.ஜ., சார்பில் கட்சி கூட்டம், கடந்த, 13ல் நடந்தது. அதில் வாழப்பாடியை சேர்ந்த அக்கட்சியின் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் தர்மலிங்கம், 72, பங்-கேற்க, 'பேஷன் புரோ' பைக்கில் வந்தார். அப்போது ஒரு லட்சம் ரூபாயை, பைக்கில் வைத்துவிட்டு கூட்டத்துக்கு சென்றார். திரும்பி வந்தபோது பைக்கில் இருந்த பணத்தை காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவர், காரிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திக், 46, திருடியது தெரிந்தது. நேற்று முன்தினம், சேலம், ஊத்துமலையில் இருந்த அவரை, போலீசார் கைது செய்து, 91,000 ரூபாயை மீட்டனர்.