Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'சமூக வலைதளத்தில் மூழ்கியுள்ள இளைஞர்கள் நல்ல தகவல்களை தெரிந்துகொள்ள அறிவுரை'

'சமூக வலைதளத்தில் மூழ்கியுள்ள இளைஞர்கள் நல்ல தகவல்களை தெரிந்துகொள்ள அறிவுரை'

'சமூக வலைதளத்தில் மூழ்கியுள்ள இளைஞர்கள் நல்ல தகவல்களை தெரிந்துகொள்ள அறிவுரை'

'சமூக வலைதளத்தில் மூழ்கியுள்ள இளைஞர்கள் நல்ல தகவல்களை தெரிந்துகொள்ள அறிவுரை'

ADDED : ஜூலை 24, 2024 07:38 AM


Google News
சேலம் : தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த, 3 நாள் கண்காட்சி சேலத்தில் நேற்று தொடங்கப்பட்டது. மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, கருத்தரங்கம், கலைநிகழ்ச்சியை, மண்டல இயக்குனர் லீலா மீனாட்சி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:

மத்திய அரசு, ஏழை, எளிய மக்களுக்கு, 26 வகை நலத்திட்டங்-களை செயல்படுத்தி வருகின்றன. அதை அனைவரும் எளிதில் தெரிந்துகொள்ள, மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மாவட்டந்-தோறும் புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்-தப்படுகின்றன.

மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும், 'ஆயுஷ்மான் பாரத்', விபத்து காப்பீடு, ஓய்வூதியம், டிஜிட்டல் இந்தியா, பிரதமரின் வீட்டு வசதி, இலவச எரிவாயு, குழந்தைகளுக்கான ஊட்டச்-சத்தை உறுதிப்படுத்தும் போஷன் அபியான், தொழில் முனை-வோரை உருவாக்கும் முத்ரா போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்ட விபரங்களை, இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் எளிதாக தெரிந்துகொள்ளலாம். எந்நேரமும் சமூக வலைத-ளத்தில் மூழ்கியுள்ள இன்றைய தலைமுறையினர், இதுபோன்ற நல்ல தகவல்களை தெரிந்து கொண்டு, குடும்பத்தினர் மட்டு-மின்றி வசிப்பிடத்தில் இருப்பவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மத்திய அரசின் புது சட்டங்கள், செல்வ மகள் சேமிப்பு திட்ட விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டன. தர்-மபுரி கள விளம்பர அலுவலர் நாத், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us