Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ சோளிங்கர் ரோப்கார் சேவை 2 நாட்கள் ரத்து

சோளிங்கர் ரோப்கார் சேவை 2 நாட்கள் ரத்து

சோளிங்கர் ரோப்கார் சேவை 2 நாட்கள் ரத்து

சோளிங்கர் ரோப்கார் சேவை 2 நாட்கள் ரத்து

ADDED : மார் 16, 2025 08:45 PM


Google News
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமிர்தவல்லி தாயார் உடனுறை யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் எதிரே சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.'

யோக நரசிம்ம சுவாமி அருள்பாலிக்கும் பெரிய மலைக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை அமைந்துள்ளது. மலையேறி சுவாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், கடந்தாண்டு மார்ச் 8ம் தேதி, பக்தர்களின் பங்களிப்புடன், ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இதில் செல்வதற்கு நபர் ஒருவருக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரோப்கார் வாயிலாக தினமும் 1,000 பேர் வரை மலைக்கோவிலுக்கு பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் 24 மற்றும் 25ம் தேதி பராமரிப்பு பணி காரணமாக, ரோப்கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us