/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ அரக்கோணம் - சேலம் மெமு ரயில் 5 மாதத்திற்கு பின் மீண்டும் இயக்கம் அரக்கோணம் - சேலம் மெமு ரயில் 5 மாதத்திற்கு பின் மீண்டும் இயக்கம்
அரக்கோணம் - சேலம் மெமு ரயில் 5 மாதத்திற்கு பின் மீண்டும் இயக்கம்
அரக்கோணம் - சேலம் மெமு ரயில் 5 மாதத்திற்கு பின் மீண்டும் இயக்கம்
அரக்கோணம் - சேலம் மெமு ரயில் 5 மாதத்திற்கு பின் மீண்டும் இயக்கம்
ADDED : மே 20, 2025 10:01 PM
அரக்கோணம்:அரக்கோணம் -- சேலம் மெமு மின்சார ரயில், கடந்த ஜனவரி மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உத்தர பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவுக்கு, இந்த மெமு ரயில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
திடீரென ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், பயணியர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், மீண்டும் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் மற்றும் அரக்கோணம் ரயில் பயணியர் சங்கம் சார்பில், தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஐந்து மாதங்களுக்கு பின், நேற்று முதல் ரயில் சேவை மீண்டும் துவக்கப்பட்டது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
அரக்கோணத்தில் இருந்து வாரத்தில் ஐந்து நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை இயக்கப்படும் இந்த ரயில், அதிகாலை 5:15 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர் வழியாக காலை 10:50 மணிக்கு சேலத்தை அடைகிறது.
மறுமார்க்கத்தில், சேலத்தில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, அதே வழித்தடத்தில், இரவு 8:45 மணிக்கு அரக்கோணத்தை வந்தடைகிறது. இந்த ரயில் சேவையால், கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பயணியர் பயனடைவர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.