/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ ஆர்ப்பாட்டத்தில் அமைச்சருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது ஆர்ப்பாட்டத்தில் அமைச்சருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
ஆர்ப்பாட்டத்தில் அமைச்சருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
ஆர்ப்பாட்டத்தில் அமைச்சருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
ஆர்ப்பாட்டத்தில் அமைச்சருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஜூலை 23, 2024 09:01 PM
சோளிங்கர்:பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் கடந்த, 19ல் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தலித் கூட்டமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலித் கூட்டமைப்பை சேர்ந்த பலர் பேசினர். அதில், சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த, இந்திய குடியரசு கட்சி நிர்வாகி இளையராஜா, 40, என்பவரும் பேசினார்.
அப்போது அவர், அமைச்சர் துரைமுருகன் குறித்து தகாத வார்த்தைகளாலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து, சோளிங்கர் போலீசில் வி.ஏ.ஓ., சங்கரநாராயணன் கொடுத்த புகார் படி, இளையராஜாவை, நேற்று முன்தினம் இரவில் போலீசார் கைது செய்தனர்.