ADDED : ஜூலை 12, 2024 08:56 PM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி, பள்ளி மாணவன் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த குமரிகிரி மலையை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா, 35, இவரது மனைவி தனலட்சுமி, 30. இவர்களது மகன் முத்து, 8, மகள் காவியா, 4, இருவரும் நேற்று முன்தினம் இரவு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் எதிரில் உள்ள மின்கம்பத்தின் அருகே நிறுத்தியிருந்த சைக்கிளை, முத்து தொட்டதில் அப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வீட்டிற்கு செல்லும் மின் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு, சைக்கிள் மீது மின்சாரம் பாய்ந்து, முத்துவை தாக்கியது. இதில் முத்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
திமிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.