/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ ரயிலில் அடிபட்டு எஸ்.ஐ., உயிரிழப்பு ரயிலில் அடிபட்டு எஸ்.ஐ., உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு எஸ்.ஐ., உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு எஸ்.ஐ., உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு எஸ்.ஐ., உயிரிழப்பு
ADDED : ஜூலை 28, 2024 12:38 AM
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன், 52. இவர், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் காலை, அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். லாவண்யா என்ற மனைவியும், பிரவின் மற்றும் நவின் என இரு மகன்கள் உள்ளனர். இரவு 10:30 மணியளவில் அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் உள்ள கடைக்கு செல்ல அரக்கோணம் ரயில் நிலைய தண்டவாளத்தை மொபைல்போனில் பேசியபடி ராகவன் கடந்தார்.
இரண்டாவது நடைமேடை தண்டவாளத்தைக் கடந்தபோது, அவ்வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரக்கோணம் ரயில்வே போலீசார், விசாரிக்கின்றனர்.