/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ சிறுமியிடம் அத்துமீறிய இளைஞருக்கு போக்சோ சிறுமியிடம் அத்துமீறிய இளைஞருக்கு போக்சோ
சிறுமியிடம் அத்துமீறிய இளைஞருக்கு போக்சோ
சிறுமியிடம் அத்துமீறிய இளைஞருக்கு போக்சோ
சிறுமியிடம் அத்துமீறிய இளைஞருக்கு போக்சோ
ADDED : ஜூலை 23, 2024 09:22 PM
அரக்கோணம்,;உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜாப்பெட், 19. இவர் அரக்கோணம் நகரம் பழனிப்பேட்டை பகுதியில் உள்ள தன் உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் நைசாக பேசி அவர் தங்கி இருந்த வீட்டின் மாடிக்கு அழைத்து சென்று சிறுமியிடம் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.