/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ தண்ணீர் என நினைத்து 'ஆசிட்' குடித்த மளிகை வியாபாரி பலி தண்ணீர் என நினைத்து 'ஆசிட்' குடித்த மளிகை வியாபாரி பலி
தண்ணீர் என நினைத்து 'ஆசிட்' குடித்த மளிகை வியாபாரி பலி
தண்ணீர் என நினைத்து 'ஆசிட்' குடித்த மளிகை வியாபாரி பலி
தண்ணீர் என நினைத்து 'ஆசிட்' குடித்த மளிகை வியாபாரி பலி
ADDED : ஜூன் 21, 2024 02:21 AM
சோளிங்கர்:சோளிங்கர் அருகே, தண்ணீர் என நினைத்து, 'ஆசிட்' குடித்த மளிகை வியாபாரி பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஜோதிபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார், 37. அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இவர் மனைவி உமா; இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மளிகை கடையில் இருந்த அசோக்குமார், தண்ணீர் பாட்டில் என நினைத்து, 'ஆசிட்' பாட்டிலை எடுத்து குடித்து விட்டார்.
இதில் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, வலியால் துடித்த அவரை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்தார். சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.