/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ சங்கத்தில் ரூ.5 கோடி கையாடல் காசாளர், செயலர் 'சஸ்பெண்ட்' சங்கத்தில் ரூ.5 கோடி கையாடல் காசாளர், செயலர் 'சஸ்பெண்ட்'
சங்கத்தில் ரூ.5 கோடி கையாடல் காசாளர், செயலர் 'சஸ்பெண்ட்'
சங்கத்தில் ரூ.5 கோடி கையாடல் காசாளர், செயலர் 'சஸ்பெண்ட்'
சங்கத்தில் ரூ.5 கோடி கையாடல் காசாளர், செயலர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 23, 2024 09:42 AM
ராணிப்பேட்டை, : ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கலில், நகர கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, நிரந்தர வைப்பு தொகை மற்றும் சேமிப்பு கணக்கில் போலி கையெழுத்து போட்டு, மோசடி நடப்பதாக வந்த புகாரின்படி, மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் நாகராஜன் தலைமையிலான அதிகாரிகள் சில நாட்களாக தணிக்கை செய்தனர்.
இதில், சங்க செயலர் சங்கர் மற்றும் காசாளர் பாரதி ஆகியோர், 5 கோடி ரூபாய் வரை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் இணை பதிவாளர் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.