/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஜூலை 07, 2024 01:02 AM
அரக்கோணம்,:அரக்கோணம் ரயில் மார்க்கமாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்துவதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று காலை ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரயில் நிலையத்தில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து திருப்பதி வரை சென்ற மெமு ரயிலில் போலீசார் சோதனைசெய்தனர்.
ரயில் பெட்டியின் இருக்கைக்கு கீழ் மறைத்து வைத்திருந்த 20 மூட்டைகளில் இருந்த 400 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து அரக்கோணம் உணவு பொருள் வழங்கல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.