ADDED : ஜூன் 15, 2025 11:06 PM
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரை பூங்கா எதிரே ரயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் ஆண் உடல் கிடந்தது.
ராமேஸ்வரம் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., முத்துமுனியசாமி, போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மரியகெல்டன் 36, என தெரியவந்தது.
இவர் மனநலம் பாதித்து சுற்றி திரிந்த நிலையில், நேற்று மாலை தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற பயணிகள் ரயில் மோதி இறந்தாரா அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.