/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/காட்டு கருவேலமரம் விறகு வெட்டுவதில் ஆர்வம்: வியாபாரிகளிடம் டன் ரூ.3500க்கு விற்பனைகாட்டு கருவேலமரம் விறகு வெட்டுவதில் ஆர்வம்: வியாபாரிகளிடம் டன் ரூ.3500க்கு விற்பனை
காட்டு கருவேலமரம் விறகு வெட்டுவதில் ஆர்வம்: வியாபாரிகளிடம் டன் ரூ.3500க்கு விற்பனை
காட்டு கருவேலமரம் விறகு வெட்டுவதில் ஆர்வம்: வியாபாரிகளிடம் டன் ரூ.3500க்கு விற்பனை
காட்டு கருவேலமரம் விறகு வெட்டுவதில் ஆர்வம்: வியாபாரிகளிடம் டன் ரூ.3500க்கு விற்பனை
UPDATED : ஜூன் 16, 2025 02:21 AM
ADDED : ஜூன் 15, 2025 11:32 PM

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டு கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளன. தற்போது காட்டு கருவேல மரம் விறகு டன் ரூ.3500 வரை விலை கொடுத்து வியாபாரிகள் வாங்குகின்றனர். இதன்காரணமாக அவற்றை வெட்டுவதில் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆர்.எஸ் .மங்கலம், திருவாடானை, தேவிபட்டினம், ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிகளவில் காட்டு கருவேல மரங்கள் உள்ளன. இங்கு வெட்டப்படும் காட்டு கருவேல மரங்களின் பெரிய வகை விறகுகள் நேரடியாக விறகுகளாகவும், சிறிய வகை விறகுகள் கரிமூட்டம் தொழில் மூலம் கரிகளாக்கியும், விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு தேவையான பாவு நுால்களை உற்பத்தி செய்து தரக்கூடிய சைசிங் மில்களில் எரிபொருள் தேவைக்காக ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகளவில் காட்டு கருவேல மர விறகுகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
தற்போது கருவேல மர விறகுகளின் தேவை அதிகரித்துள்ளதால் டன் காட்டு கருவேல மர விறகு ரூ.3500க்கு தொழிலாளர்களிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயிகள் வாகனங்களில் கொண்டு வரும் விறகுகளை நேரடியாக எடையிட்டு உடனுக்குடன் அதற்கான தொகையை பெற்று வருவதால், காட்டுகருவேல மரம் விறகுகளை விற்பனை செய்வதில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.