Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பேரிடர் மேலாண்மை காலங்களில் சிறப்பான பணிக்கு விருது பெறலாம்

பேரிடர் மேலாண்மை காலங்களில் சிறப்பான பணிக்கு விருது பெறலாம்

பேரிடர் மேலாண்மை காலங்களில் சிறப்பான பணிக்கு விருது பெறலாம்

பேரிடர் மேலாண்மை காலங்களில் சிறப்பான பணிக்கு விருது பெறலாம்

ADDED : மே 13, 2025 05:37 AM


Google News
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை காலங்களில் தனிநபர்கள், நிறுவனங்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு விருது வழங்கப்படவுள்ளது.

இந்திய அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பேரிடர் மேலாண்மை காலத்தில் சிறப்பான பணியை ஊக்கப்படுத்தும் விதமாக சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஷ்கார் என்ற வருடாந்திர தேசிய விருதினை வழங்கவுள்ளது.

எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை இனங்களில் சிறப்புற செயலாற்றியவர்கள் ramanathapuram.nic.in என்ற இணையதளத்தில் அப்ளிகேஷன் இன்வெய்ட்டேடு பார் சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஷ்கார் 2026 என்ற தலைப்பின் வாயிலாகவோ, http://awards.gov.in என்ற இணைப்பை கிளிக்செய்து ஆன்-லைனில் தங்கள் விண்ணப்பங்களை உரிய ஆதார ஆவணங்களுடன் செப்., 30 வரை பதிவு செய்யலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.--





      Our Apps Available On




      Dinamalar

      Follow us