Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த சிறுபாசனம், நீர்நிலை கணக்கெடுப்பு

நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த சிறுபாசனம், நீர்நிலை கணக்கெடுப்பு

நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த சிறுபாசனம், நீர்நிலை கணக்கெடுப்பு

நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த சிறுபாசனம், நீர்நிலை கணக்கெடுப்பு

ADDED : மே 13, 2025 05:38 AM


Google News
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் புள்ளி இயல் துறை சார்பில், நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக, 7-வது சிறுபாசனம் மற்றும் 2வது நீர்நிலை கணக்கெடுப்பு குறித்த மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மற்றும் பயிற்சி கூட்டம் நடந்தது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமைவகித்து பேசியதாவது: சிறுபாசனக் கணக்கெடுப்பு என்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது.

இதன் நோக்கம் சிறுபாசனப் பிரிவு சார்ந்த தெளிவானபுள்ளி விவரங்களை திரட்டி நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துவது ஆகும்.

வருவாய் கிராம அளவில் நீர் பாசனத்திற்கு பயன்படும் கண்மாய்கள், குளங்கள், கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் தொடர்பான விவரம் கிராம புறங்களில் வி.ஏ.ஓ.,க்கள் மூலம் தேசிய தகவல் மையம் மூலம் உருவாக்கப்பட்ட அலைப்பேசி செயலி வாயிலாக சேகரிக்கப்பட உள்ளது.

மேலும், 2வது நீர்நிலைகள் தொடர்பானஆய்வானது, விவசாயம் மற்றம் இதர பயன்பாடுகளுக்கான கண்மாய்கள், குளங்கள் குறித்த ஆய்வாகும். நீர்நிலைகள் தொடர்பான தரவுகளை சேகரித்து திட்டமிடலுக்கு பயன்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

கிராம புறங்களில் வருவாய்த்துறையினர், நகரில் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர்கள் விவரங்கள் சேகரிக்க உள்ளனர். இப்பணியின் முக்கியத்துவம் கருதி வட்ட அளவில் வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள், பேரூராட்சி, நகராட்சி பணியாளர்களுக்கு மே 13,14 தேதிகளில் புள்ளியியல்துறை அலுவலர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர் என்றார்.

இப்பயிற்சி கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷா கவுர், மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் ஜெயசங்கர், தாசில்தார்கள், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை, நிலத்தடி நீர் பிரிவு அலுவலர்கள் மற்றும்புள்ளி இயல் துறையினர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us