/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இடைநிலை பராமரிப்பு மையம் நடத்துவதற்கு விண்ணப்பிக்கலாம் இடைநிலை பராமரிப்பு மையம் நடத்துவதற்கு விண்ணப்பிக்கலாம்
இடைநிலை பராமரிப்பு மையம் நடத்துவதற்கு விண்ணப்பிக்கலாம்
இடைநிலை பராமரிப்பு மையம் நடத்துவதற்கு விண்ணப்பிக்கலாம்
இடைநிலை பராமரிப்பு மையம் நடத்துவதற்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 04, 2025 11:36 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் செயல்படும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடைநிலை பராமரிப்பு மையத்தை நடத்த விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதன்படி ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் இடைநிலை பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.இம்மையத்தை வேறு ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்திற்கு மாற்றம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016-ல் பதிவு பெற்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மனநலம் பாதிக்கப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையத்தை தொடர்ந்து நடத்த விரும்பினால் தங்களது விண்ணப்பம் மற்றும் கருத்துருவை ஜூன் 10 மாலை 5:00 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.