Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி அரசு மகளிர் கல்லுாரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்: மே 27 கடைசி நாள்

பரமக்குடி அரசு மகளிர் கல்லுாரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்: மே 27 கடைசி நாள்

பரமக்குடி அரசு மகளிர் கல்லுாரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்: மே 27 கடைசி நாள்

பரமக்குடி அரசு மகளிர் கல்லுாரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்: மே 27 கடைசி நாள்

ADDED : மே 21, 2025 11:56 PM


Google News
பரமக்குடி: பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சேர்வதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகளிர் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம், பி.ஏ., ஆங்கில இலக்கியம், பி.காம்(சி.ஏ.,), பி.பி.ஏ, பி.ஏ., பொருளாதாரம் (தமிழ் வழி) மற்றும் பி.எஸ்.சி., கணினி அறிவியல் ஆகிய இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன.

மே 8ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும், www.tngasa.in என்ற இணையதளத்தில் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்து பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவிகள் சேர்க்கை உதவி மையம் செயல்படுகிறது.

இங்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் ரூ.50, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு ரூ.2 விண்ணப்பக் கட்டணமாக பெறப்படுகிறது. இணையதளத்தில் விண்ணப்பிக்க மே 27 கடைசி நாள்.

ஆன்லைன் வழி விண்ணப்பிக்க மாணவிகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலையும், தேவைப்படும் அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 04564--227089, 227090 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லுாரி முதல்வர் கு.வனஜா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us