ADDED : ஜூன் 08, 2025 04:54 AM
திருப்புல்லாணி : -திருப்புல்லாணியில் இயங்கி வரும் வாப்ஸ் மற்றும் சி.எம்.எஸ்., தொண்டு நிறுவனங்கள் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினம் காஞ்சிரங்குடி கிராமத்தில் நடந்தது.
விழிப்புணர்வு நடை பயணம் நடந்தது. காஞ்சிரங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்சாமி தலைமை வகித்தார்.
வாப்ஸ் தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். களப்பணியாளர்கள் மேனகா, கனிமொழி பங்கேற்றனர்.