Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சமுதாயவளப் பயிற்றுனர் பணிக்குபெண்கள் விண்ணப்பிக்கலாம் 

சமுதாயவளப் பயிற்றுனர் பணிக்குபெண்கள் விண்ணப்பிக்கலாம் 

சமுதாயவளப் பயிற்றுனர் பணிக்குபெண்கள் விண்ணப்பிக்கலாம் 

சமுதாயவளப் பயிற்றுனர் பணிக்குபெண்கள் விண்ணப்பிக்கலாம் 

ADDED : செப் 18, 2025 05:24 AM


Google News
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் 2025--26ம் ஆண்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுனர் பணியிடங்களுக்கு தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்து வட்டாரங்களிலுள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் செப்.,22 மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தது இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது. சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்குஉதவித் திட்ட அலுவலரை 87780 64218 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us