/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குவியும் மனுக்கள் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குவியும் மனுக்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குவியும் மனுக்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குவியும் மனுக்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குவியும் மனுக்கள்
ADDED : செப் 18, 2025 05:25 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்கள் குவிகிறது. நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. திருவாடானை தாலுகாவில் 47 ஊராட்சிகளிலும் முகாம் நடந்து வருகிறது. இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் 2500க்கும் மேற்பட்ட மனுக்கள் மகளிர் உதவித் தொகை கேட்டு அளிக்கப்பட்டன.
முகாம்களில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் பங்கேற்று மனுக்களை கொடுக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் முகாம்களில் பல கோரிக்கைகளுடன் கூடிய மனுக்கள் குவிகின்றன.
நேற்று நெய்வயல் ஊராட்சியில் முகாம் நடந்தது. இதில் திருவாடானையிலிருந்து தேவகோட்டைக்கு அதங்குடி, நெய்வயல், நாச்சியேந்தல், அணிக்கி, அல்லிக்கோட்டை, நெய்வயல் புல்லாவயல் வழியாக 14 முறை டவுன் பஸ் செல்கிறது.
இந்த ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலத்தில் பஸ் நிறுத்தப்படுகிறது.
இந்த ரோட்டை பணிப்பட்டியலில் சேர்த்து சீரமைக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி 30 க்கும் மேற்பட்டோர் மனுக்கள் கொடுத்தனர். இம் முகாமில் தாசில்தார் ஆண்டி, பி.டி.ஓ., விஜி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.