/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ முருங்கைக்காய் பறித்த பெண் மின்சாரம் தாக்கி பலி முருங்கைக்காய் பறித்த பெண் மின்சாரம் தாக்கி பலி
முருங்கைக்காய் பறித்த பெண் மின்சாரம் தாக்கி பலி
முருங்கைக்காய் பறித்த பெண் மின்சாரம் தாக்கி பலி
முருங்கைக்காய் பறித்த பெண் மின்சாரம் தாக்கி பலி
ADDED : செப் 22, 2025 03:54 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடி கிராமம் கவிதைகுடியைச் சேர்ந்த நாகராஜன் மனைவி தாமரைச்செல்வி 56. இவர் தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் முருங்கைக்காய் பறிக்க 20 அடி நீளம் உள்ள இரும்பு குழாயை பயன்படுத்தினார்.
அப்போது கால் தடுமாறியதில் மரத்தின் அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பியின் மீது இரும்பு குழாய் உரசியது. இதனால் தாமரைச்செல்வி உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.