Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேவர் குருபூஜை விழாவில் மோடி பங்கேற்க கோரிக்கை

தேவர் குருபூஜை விழாவில் மோடி பங்கேற்க கோரிக்கை

தேவர் குருபூஜை விழாவில் மோடி பங்கேற்க கோரிக்கை

தேவர் குருபூஜை விழாவில் மோடி பங்கேற்க கோரிக்கை

ADDED : செப் 22, 2025 03:55 AM


Google News
கமுதி : கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை, ஜெயந்தி விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வர வேண்டும் என, பா.ஜ., தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்திற்கு தமிழக பா.ஜ., இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நேற்றுமுன்தினம் இரவு வந்தார். தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பூர்வீக வீடு, பூஜை அறை, புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது தேவர் குருபூஜை விழாவான அக்.,30ல் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வரவேண்டும் என, அவரிடம் பா.ஜ., நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதன்பிறகு பா.ஜ., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேசியதாவது: 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். பிரதமர் பிறந்தநாள் விழா 15 நாட்கள் சேவை வார தினங்களாக நலத்திட்ட உதவிகள் செய்கின்றனர்.

ஜி.எஸ்.டி., வரி குறைப்பின் மூலமாக இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெறும்.

தேவர் குருபூஜை விழாவிற்கு பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பேன் என்றார். தேவர் நினைவாலயத்தில் மரக்கன்று நடப்பட்டது.

மாவட்டத் தலைவர் முரளிதரன், கமுதி தெற்கு மண்டல தலைவர் வேலவன் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us