ADDED : பிப் 11, 2024 12:18 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தர்பூசணிபழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறைந்த அளவே சாகுபடி செய்யப்படுவதால் பெரும்பாலானவற்றை வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து வியாபாரிகள் விற்கின்றனர்.
தற்போது மாவட்டத்தில்பருவமழை முடிவுக்குவந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இதன் காரணமாக வெப்பத்தை தணிக்கும்பழங்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக தர்பூசணி பழங்கள் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளன. கிலோ ரூ.20க்கு விற்பனை செய்வதாக வியாபாரிகள் கூறினர்.