/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உப்பூர் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல் உப்பூர் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்
உப்பூர் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்
உப்பூர் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்
உப்பூர் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 21, 2025 11:51 PM
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் அருகில் உள்ள ஊருணியை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப் பெற்றுள்ளதால் இந்த விநாயகர் வெயில் உகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
இந்த விநாயகருக்கு சதுர்த்தி விழாவின் போது இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடப்பதால் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள ஊருணியில் கால்களை சுத்தம் செய்துவிட்டு கோயிலுக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் சில ஆண்டுகளாக ஊருணி பராமரிப்பின்றி சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்து மண்மேடாகி உள்ளதால் மழைக்காலத்தில் போதிய நீரை தேக்க முடியாத நிலையில் விரைவாக ஊருணி நீர் வற்றி விடுகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு வருவதால் கோயில் அருகே உள்ள ஊருணியை துார்வாரி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.