/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வண்ணாங்குண்டு அருகே பஸ் வசதி இல்லாத 5 கிராமங்கள் பொதுமக்கள் அவதி வண்ணாங்குண்டு அருகே பஸ் வசதி இல்லாத 5 கிராமங்கள் பொதுமக்கள் அவதி
வண்ணாங்குண்டு அருகே பஸ் வசதி இல்லாத 5 கிராமங்கள் பொதுமக்கள் அவதி
வண்ணாங்குண்டு அருகே பஸ் வசதி இல்லாத 5 கிராமங்கள் பொதுமக்கள் அவதி
வண்ணாங்குண்டு அருகே பஸ் வசதி இல்லாத 5 கிராமங்கள் பொதுமக்கள் அவதி
ADDED : மே 21, 2025 11:51 PM
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு கிராமத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து பஸ் வசதி இருந்தும் அருகே உள்ள ஐந்து கிராமங்களுக்கு பஸ்கள் செல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட சிலம்பிநாடு, புதுார், கொடைக்கான்வலசை, செல்வனுார், நேருபுரம் ஆகிய கிராமங்கள் வரிசையாக அமைந்துள்ளன. இங்கு ராமநாதபுரத்தில் இருந்து செல்லும் பஸ் கிராமங்களுக்கு செல்லாமல் பஸ் ஸ்டாப்பில் இருந்து திரும்பி செல்வதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
பஸ் பயணிகள் கூறியதாவது: சிலம்பிநாடு உட்பட ஐந்துக்கும் அதிகமான கிராம மக்களுக்கு பஸ் செல்வதற்கான வழித்தடம் இருந்தும் பஸ்கள் செல்லாமல் உள்ளது.
இதனால் 3 கி.மீ.,ல் வண்ணாங்குண்டு செல்வதற்கு ஒரு நபருக்கு ரூ.100 வீதம் ஆட்டோவிற்கு கொடுக்க வேண்டியது உள்ளது.
எனவே போக்குவரத்து துறை அலுவலர்கள் வண்ணாங்குண்டு வரும் வழியில் தொடர்ச்சியாக உள்ள ஐந்து கிராமங்களுக்கும் பஸ் வழித்தடத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.