ADDED : செப் 09, 2025 10:58 PM

திருவாடானை; திருவாடானை பகுதியில் ஆண்டாவூரணி, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, கூகுடி, கிளியூர், நெய்வயல், நாகனி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விதைப்பு பணிகள் துவங்கியுள்ளன.
நெல் விதைப்பு பணிகள் துவங்கியதால் வெளிமாவட்டங்களிலிருந்து டிராக்டர்கள் வந்துள்ளது. திருவாடானையில் விதை நெல் மூடைகளை வாங்கி டிராக்டரின் பின்புறம் உள்ள உழவு கலப்பையில் அடுக்கி வைத்து கொண்டு செல்கின்றனர். பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லும் இந்த மூடைகள் தவறி விழுந்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே விதை நெல் மூடைகளை பாதுகாப்பாக வயல்களுக்கு கொண்டு செல்லவேண்டும்.