/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து துாய்மை பணியாளர் உள்ளிருப்பு போராட்டம் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து துாய்மை பணியாளர் உள்ளிருப்பு போராட்டம்
பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து துாய்மை பணியாளர் உள்ளிருப்பு போராட்டம்
பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து துாய்மை பணியாளர் உள்ளிருப்பு போராட்டம்
பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து துாய்மை பணியாளர் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : செப் 09, 2025 10:57 PM

கமுதி; கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் சம்பளம் கேட்டுச் சென்ற துாய்மை பணியாளர்களை துர்நாற்றம் வீசுகிறது எனக் கூறி ஒருமையில் பேசிய பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா செயல்பாட்டை கண்டித்து துாய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள தெருக்களில் சுத்தம் செய்து குப்பையை சேகரித்து துாய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை சம்பளம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து துாய்மைப் பணியாளர்கள் தங்களது வழக்கமான துாய்மைப் பணியை முடித்து விட்டு சம்பளம் கேட்பதற்காக செயல் அலுவலரின் அறைக்கு சென்றுள்ளனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா, துாய்மைப் பணியாளர்களை பார்த்து துர்நாற்றம் வீசுகிறது துாரப்போ என்று கூறி ஒருமையில் பேசியுள்ளார்.
செயல் அலுவலர் யசோதாவை கண்டித்து கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்கள் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து துாய்மைப் பணியாளர்கள் கூறியதாவது: மாதந்தோறும் முதல் தேதி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்த மாதம் வழங்கப்படாததால் சம்பளம் கேட்பது குறித்து செயல் அலுவலரிடம் உள்ளே சென்று கேட்ட போது துர்நாற்றம் வீசுகிறது என்று ஒருமையில் பேசி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் அனைவரும் உரிய ஆவணங்கள் கொடுத்தால் மட்டும்தான் சம்பளம் வரவு வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே உடனடியாக சம்பளம் வழங்கவும் ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்.
போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 14வது வார்டு கவுன்சிலர் சத்யா, பா.ஜ., கமுதி தெற்கு மண்டல தலைவர் வேலவன் உள்ளிட்ட பா.ஜ.,நிர்வாகிகளும் ஈடுபட்டனர்.