ADDED : செப் 16, 2025 04:11 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே துாரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் துாரி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
தாமரை தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கு சீருடை தயார் செய்யப்பட்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் காளிமுத்து வரவேற்றார். தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளர் சகுந்தலா மாணவர்களுக்கு சீருடை, இனிப்புகள் வழங்கினார். தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள்,பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.