ADDED : செப் 16, 2025 04:11 AM

கீழக்கரை: கீழக்கரை ஹிந்து பஜார் தட்டார் தெரு உக்கிரவீரமாகாளியம்மன் கோயிலில் கடந்த ஆண்டு செப்., 15ல் கும்பாபிஷேகம் நடந்தது.
ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமம், லட்சுமி, குபேர ஹோமம் நடந்தது. புனித நீரால் மூலவர் உக்கிர வீரமாகாளி அம்மன், விநாயகர், முருகன், ஐயப்பன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக தீபாராதனைகள் நடந்தது.
ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.