/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ரோட்டின் குறுக்கே டூவீலர்களை நிறுத்தி வைத்து சாலைப்பணிரோட்டின் குறுக்கே டூவீலர்களை நிறுத்தி வைத்து சாலைப்பணி
ரோட்டின் குறுக்கே டூவீலர்களை நிறுத்தி வைத்து சாலைப்பணி
ரோட்டின் குறுக்கே டூவீலர்களை நிறுத்தி வைத்து சாலைப்பணி
ரோட்டின் குறுக்கே டூவீலர்களை நிறுத்தி வைத்து சாலைப்பணி
ADDED : ஜன 07, 2024 04:22 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சாலைப் பணிக்காக ரோட்டின் குறுக்கே டூவீலர்களை நிறுத்தி வைத்து பணி மேற்கொண்டதால் குழப்பம் அடைந்த வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் டி.டி.மெயின் ரோட்டில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்களின் நலன் கருதி தாலுகா அலுவலகம் முன்பு ரோட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வேகத்தடை உள்ளது குறித்து வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் விதமாக வெள்ளை வர்ணம் நேற்று பூசப்பட்டது. வர்ணம் பூசும் பணியின் போது ஆங்காங்கே டூவீலர்களை ரோட்டின் குறுக்கே தொடர்ச்சியாக நிறுத்தி வைத்து பணி மேற்கொண்டனர்.
பணி நடப்பதற்கான எச்சரிக்கை பலகை இருபுறமும் வைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளும் நிலையில் ரோட்டில் குறுக்கே டூவீலர்களை நிறுத்தி பணிகள் மேற்கொண்டதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்ததுடன் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்பட்டது.