Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 40 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்

40 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்

40 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்

40 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்

ADDED : மார் 23, 2025 04:52 AM


Google News
திருவாடானை : திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 40 கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 128 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கும் பணிகள் நடக்கிறது. இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கூறியதாவது:

ஹிந்து சமய அறநிலையங்கள் சட்ட விதிகளின்படி அறங்காவலர்கள் நியமனம் செய்யும் பணிகள் நடக்கிறது.

இப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நேரில் விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

ஹிந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஒழுக்கக்கேடு பற்றிய குற்றத்திற்காக நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருக்க கூடாது. தொழுநோய் மற்றும் உடல் உறுப்பு குறைவானவர்கள், அல்லது அருவருக்கதக்க ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கபட்டிருக்க கூடாது.

மேலும் விபரங்களை அலுவலகத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கபட்டிருந்தது.

இதில் மொத்தமுள்ள 128 கோயில்களில் 40 கோயில்களுக்கு மட்டும் அறங்காவலர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.

மீதமுள்ள கோயில்களுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளது. அவைகளை பரிசீலனை செய்து அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us