Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சிவாலயங்களை தரிசிக்க இன்ஜினியர் வளர்ப்பு நாயுடன் நடைபயணம்

சிவாலயங்களை தரிசிக்க இன்ஜினியர் வளர்ப்பு நாயுடன் நடைபயணம்

சிவாலயங்களை தரிசிக்க இன்ஜினியர் வளர்ப்பு நாயுடன் நடைபயணம்

சிவாலயங்களை தரிசிக்க இன்ஜினியர் வளர்ப்பு நாயுடன் நடைபயணம்

ADDED : ஜன 04, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்:-உத்தரபிரதேசத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் யாதிகவுர் 27. இவர் இந்தியாவில் உள்ள சிவாலயங்களை தரிசிக்க 13 ஆயிரம் கி.மீ., தனது வளர்ப்பு நாயுடன் ஓராண்டுக்கு மேலாக நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

இவர் இந்தியாவில் உள்ள சிவாலயங்களை நடை பயணமாக சென்று தரிசனம் செய்ய முடிவு செய்தார். இவர் வளர்ப்பு நாய் பட்டர் 3, உடன் 2022 நவ.1ல் பத்ரிநாத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார். உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், பீஹார், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரபிரதேசம் வழியாக தமிழகம் வந்துள்ளார். சிவாலயங்களில் தரிசனம் செய்தவர், ராமேஸ்வரம் வந்தார். அங்கு தரிசனம் முடித்து ராமநாதபுரத்திற்கு வந்தார். இங்கிருந்து கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் சென்று இறுதியாக பயணம் தொடங்கிய பத்திரிநாத் என 13,000 கி.மீ., துாரம் நடை பயணமாக இரண்டரை ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us