/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சந்தையில் கடைகள் அமைக்க கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏ., அதிருப்தியில் வியாபாரிகள் சந்தையில் கடைகள் அமைக்க கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏ., அதிருப்தியில் வியாபாரிகள்
சந்தையில் கடைகள் அமைக்க கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏ., அதிருப்தியில் வியாபாரிகள்
சந்தையில் கடைகள் அமைக்க கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏ., அதிருப்தியில் வியாபாரிகள்
சந்தையில் கடைகள் அமைக்க கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏ., அதிருப்தியில் வியாபாரிகள்
ADDED : ஜூன் 08, 2025 11:10 PM

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சியில் வார சந்தையில் கடைகள் அமைக்கப்படும் என திறப்புவிழாவின் போது ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா வாக்குறுதி அளித்தார். அதனை ஓராண்டாகியும் நிறைவேற்றவில்லை என வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ரெகுநாதபுரத்தில் கடந்த 2024 ஜூலை முதல் புதியதாக வாரச்சந்தை அமைக்கப்பட்டது.
ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, வாலாந்தரவை, காரான், கும்பரம், நயினாமரைக்கான், பத்திராதரவை, வண்ணாங்குண்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் வியாபாரிகளும் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த நவ., டிச., ஜன., மாதங்களில் பெய்த மழை மற்றும் கோடை காலங்களில் பெய்த மழையால் சந்தை அமைந்துள்ள திடல் பகுதி முழுவதும் தண்ணீரால் நிரம்பி காணப்பட்டது.
இதனால் வியாபாரிகள் தண்ணீர் தேங்காத இடங்களிலும் கடை விரித்து தற்காலிக பந்தல் மூலமாக வியாபாரம் செய்ய சிரமப்படுகின்றனர்.
பா.ஜ., திருப்புல்லாணி ஒன்றிய பொதுச் செயலாளர் தேவராஜ் அலெக்ஸ் கூறியதாவது:
ரெகுநாதபுரம் புதிய சந்தை திறப்பு விழாவில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., இப்பகுதியில் வியாபாரிகளின் வசதிக்காக கடைகள் அமைத்து தருவதாக வாக்குறுதி வழங்கினார். அவை தற்போது வரை நிறைவேற்றவில்லை.
ரெகுநாதபுரம் ஊராட்சியின் தனி அலுவலர்கள் மூலம் சாலையோர வியாபாரிகள் மற்றும் சந்தை வியாபாரிகளிடம் ரூ.30, ரூ.50 மற்றும் 100 என்று, கடைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
சாலையின் இரு புறங்களிலும் அரசு பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கூடுதல் கழிப்பறை வளாகங்களை ஏற்படுத்த வேண்டும். புதிய கடை வளாகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.