/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பெயரளவுக்கு கொரோனா வார்டு அடிப்படை வசதிகளும் இல்லை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பெயரளவுக்கு கொரோனா வார்டு அடிப்படை வசதிகளும் இல்லை
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பெயரளவுக்கு கொரோனா வார்டு அடிப்படை வசதிகளும் இல்லை
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பெயரளவுக்கு கொரோனா வார்டு அடிப்படை வசதிகளும் இல்லை
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பெயரளவுக்கு கொரோனா வார்டு அடிப்படை வசதிகளும் இல்லை
ADDED : ஜூன் 08, 2025 11:10 PM

ராமநாதபுரம்,: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவசர கதியில் பெயரளவுக்கு கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பழைய கட்டடத்தில் மன நலப்பிரிவுக்கு மேல் உள்ள 2 வது மாடியில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போதுமான வசதிகள் இல்லை.
கண்ணாடி உடைந்த மற்றும் திறக்க முடியாத கதவுகள், சிறகு இல்லாத மின்விசிறிகள், கழிப்பறை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் அப்பகுதியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் 40 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கொரோனா சிறப்பு வார்டில் 10 படுக்கைகள் மட்டுமே உள்ளன. வெண்டிலேட்டர் 4 மட்டுமே உள்ளன.
நான்கும் இயங்குமா என்பது சந்தேகமே இப்படி எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் கொரோனா திறக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் மூன்று நோயாளிகளிடம் சளி மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு, கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பாதிப்பு இருந்தால் சம்பந்தப்பட்ட நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவுள்ளனர்.
மருத்துவமனையில் போதுமான கட்டடம், படுக்கை வசதிகள் இருந்தும், மருத்துவமனை நிர்வாகம் வசதிகள் இல்லாத கட்டடத்தில் கொரோனா வார்டு அமைத்திருப்பது அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா தலங்களை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெளி நாட்டு பயணிகள், முக்கியமான வி.ஐ.பி., வருகை தரும் இடத்தில் இதுபோன்று பெயரளவுக்கு கொரோனா வார்டு அமைத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.