Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அரசு போக்குவரத்து அலுவலகங்கள்  முன்பு தொழிற்சங்கங்கள் போராட்டம் 

அரசு போக்குவரத்து அலுவலகங்கள்  முன்பு தொழிற்சங்கங்கள் போராட்டம் 

அரசு போக்குவரத்து அலுவலகங்கள்  முன்பு தொழிற்சங்கங்கள் போராட்டம் 

அரசு போக்குவரத்து அலுவலகங்கள்  முன்பு தொழிற்சங்கங்கள் போராட்டம் 

ADDED : ஜன 30, 2024 11:31 PM


Google News
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் நகர், புறநகர் கிளை அரசு போக்குவரத்துக்கழகஅலுவலகங்கள் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பினர் வாயிற்கூட்டம் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் நகர் கிளையில் சி.ஐ.டி.யு., செயலாளர் துரைப்பாண்டி தலைமையில் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மண்டல நிர்வாகி மணிக்கண்ணு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். புறநகர் கிளையில் கிளைத் தலைவர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சி.ஐ.டி.யு., மத்திய சங்க செயலாளர் எம்.பாஸ்கரன், களஞ்சியம், ஆறுமுகம், ராஜாராம் பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். ஓய்வூதியர்களின் நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களைநிரப்ப வேண்டும்.

வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.--





      Our Apps Available On




      Dinamalar

      Follow us