/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மழைக்காலங்களில் ஒழுகும் டவுன் பஸ்: பயணிகள் அவதி மழைக்காலங்களில் ஒழுகும் டவுன் பஸ்: பயணிகள் அவதி
மழைக்காலங்களில் ஒழுகும் டவுன் பஸ்: பயணிகள் அவதி
மழைக்காலங்களில் ஒழுகும் டவுன் பஸ்: பயணிகள் அவதி
மழைக்காலங்களில் ஒழுகும் டவுன் பஸ்: பயணிகள் அவதி
ADDED : செப் 09, 2025 03:47 AM
கீழக்கரை,: கீழக்கரை, பெரியபட்டினம், காஞ்சிரங்குடி, திருப்புல்லாணி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு சேதமடைந்த பழைய டவுன் பஸ்கள் இயக்கப்படுவதால் இவை மழை பெய்தால் தண்ணீர் ஒழுகுவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். பயணிகள் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய பஸ்கள் குறிப்பிட்ட கிராமங்கள் மற்றும் நகர் பகுதி வழித்தடங்களில் இயங்கி வரும் நிலையில் கீழக்கரை, பெரியபட்டினம், காஞ்சிரங்குடி, திருப்புல்லாணி சேதமடைந்த பழையடவுன் பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
கும்பகோணம் கோட்ட அரசு டவுன் பஸ்கள் கூரை மழைக் காலங்களில் ஒழுகுகிறது. மழை நீர் நேராக பயணிகளின் மீது பட்டுத் தெரிக்கிறது. இதனால் ஒரு சில பயணிகள் குடைகளுடனும் மழைக்கோட்டு அணிந்தும் பஸ்சில் பயணம் செய்கின்றனர்.
மழைக்காலத்திற்கு முன் சேதமடைந்த நிலையில் உள்ள பஸ்களை கண்டறிந்து கூரை ஒழுகாத வண்ணம் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். பஸ்சில் தனியார் விளம்பரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பராமரிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடுத்த வேண்டும் என்றனர்.