/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இடிவிலக்கி கிராமத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை மாசுபடிந்த குடிநீர் வினியோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள் இடிவிலக்கி கிராமத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை மாசுபடிந்த குடிநீர் வினியோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
இடிவிலக்கி கிராமத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை மாசுபடிந்த குடிநீர் வினியோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
இடிவிலக்கி கிராமத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை மாசுபடிந்த குடிநீர் வினியோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
இடிவிலக்கி கிராமத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை மாசுபடிந்த குடிநீர் வினியோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : செப் 09, 2025 03:47 AM

பெருநாழி: பெருநாழி அருகே இடி விலக்கி மற்றும் கோசுராமன் கிராமங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் காவிரி குடிநீர் கலங்கிய நிலையில் சுகாதாரமற்று வினியோகம் செய்யப்படுகிறது.
இடி விலக்கி ஊராட்சிக்கு உட்பட்ட இடி விலக்கி, கோசுராமன் கிராமத்தில் 3000 பேருக்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் தெரு குழாய்கள் மூலமாக விநியோகம் செய்யப்படும் காவிரி நீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும் சகதியுடன் மாசு படிந்துள்ளது.
சுகாதாரக் கேட்டுடன் உள்ள நீரை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
பா.ஜ., கமுதி தெற்கு ஒன்றிய தலைவர் வேலவன் கூறியதாவது:
15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதுவும் சேறும் சகதியுடன் விநியோகம் செய்யப்படுவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லாரியில் குடம் தண்ணீர் ரூ.12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
வருமானத்தின் ஒரு பகுதியை குடிநீருக்கே செலவிட வேண்டியுள்ளது. சுகாதாரமற்ற குடிநீரால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து கமுதி பி.டி.ஓ., விற்கும், கலெக்டருக்கும் மனு அளித்துள்ளோம். எனவே யூனியன் அதிகாரிகள் ஆய்வு செய்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.