ADDED : ஜூலை 03, 2025 10:26 PM
சிக்கல்; சிக்கல் அருகே வாலிநோக்கம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக புகார் வந்தது.
கீழக்கரை டி.எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவின் பேரில் வாலிநோக்கம் எஸ்.ஐ., ரத்தினவேல் உள்ளிட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வாலிநோக்கம் விலக்கில் உள்ள நண்பர்கள் டீக்கடையில் 410 கிராம் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடலாடி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி டீ கடைக்கு சீல் வைத்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.