/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம்! விபத்திற்கு முன் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம்! விபத்திற்கு முன் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்
பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம்! விபத்திற்கு முன் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்
பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம்! விபத்திற்கு முன் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்
பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம்! விபத்திற்கு முன் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்
ADDED : ஜூலை 03, 2025 10:27 PM

ராமநாதபுரம் பகுதியில் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ் படிகட்டுகளில் தொங்கியபடிபயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.
மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்திற்கு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிய மற்றும் கல்லுாரி, பள்ளிகளில் படிக்க தினந்தோறும் பல ஆயிரம் மக்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ் போக்குவரத்து வசதி இல்லை.
இதன் காரணமாக பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும், காலை, மாலை நேரங்களில் பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி முதியோர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.
கடந்த காலங்களில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். இது தெரிந்தும்ராமநாதபுரத்தில் அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர். இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகங்கள் துவங்கும், முடியும் நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை கண்டித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.