Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/காளையார்கோவிலில் நகை கொள்ளை திருவாடானையில் போலீசார் விசாரணை 

காளையார்கோவிலில் நகை கொள்ளை திருவாடானையில் போலீசார் விசாரணை 

காளையார்கோவிலில் நகை கொள்ளை திருவாடானையில் போலீசார் விசாரணை 

காளையார்கோவிலில் நகை கொள்ளை திருவாடானையில் போலீசார் விசாரணை 

ADDED : ஜன 28, 2024 05:10 AM


Google News
Latest Tamil News
திருவாடானை ; காளையார்கோவிலில் கம்பியால் தாக்கி 60 பவுன் நகைகளை கொள்ளையடித்தது தொடர்பாக திருவாடானை பகுதியில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லுவழி கிராமத்தில் மரக்கடை உரிமையாளர் சின்னப்பன் 70. இவரது மனைவி காரமேரி 65, வசிக்கின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு இரும்பு கம்பியால் சின்னப்பன், காரமேரி உள்ளிட்ட ஐந்து பேரை தாக்கிவிட்டு பீரோவில் இருந்த 60 பவுன் நகைகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாடானை பகுதியில் வட மாநிலத்தவர்கள் தங்கியிருந்து போர்வை, ஜமுக்காளம் மற்றும் விவசாய கருவிகளை கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

சின்ன கீரமங்கலத்தில் தங்கியுள்ள அவர்களின் அறைகளில் திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் சோதனை செய்து விசாரணை செய்தனர். ஏற்கனவே டி.நாகனியில் உள்ள தபால் அலுவலகத்தில் பணப்பெட்டியை உடைத்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக வட மாநில வாலிபர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது.

அந்த கைரேகையுடன் காளையார்கோவில் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் கைரேகை ஒப்பிட்டு பார்க்கும் பணிகளும் நடக்கிறது. மேலும் திருவாடானை வடக்கு ரத வீதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானவைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us