/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி அருகே பெருங்கரையில் சிவன், பார்வதி திருக்கல்யாணம் பரமக்குடி அருகே பெருங்கரையில் சிவன், பார்வதி திருக்கல்யாணம்
பரமக்குடி அருகே பெருங்கரையில் சிவன், பார்வதி திருக்கல்யாணம்
பரமக்குடி அருகே பெருங்கரையில் சிவன், பார்வதி திருக்கல்யாணம்
பரமக்குடி அருகே பெருங்கரையில் சிவன், பார்வதி திருக்கல்யாணம்
ADDED : மே 23, 2025 11:31 PM

பரமக்குடி: பரமக்குடி அருகே பெருங்கரை ஆதி சக்தி ராஜராஜேஸ்வரி சக்தி பீடத்தில் சிவன், பார்வதி திருக்கல்யாணம் நடந்தது.
இங்கு மே 15 காலை கணபதி ஹோமம் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கி நடக்கிறது. தினமும் ராஜராஜேஸ்வரி அம்மன் சந்தனமாரி, வீரமாகாளி, சரஸ்வதி, மீனாட்சி, காமாட்சி, மகாலட்சுமி என அருள்பாலித்தார். மே 22 மாலை ராஜ ராஜேஸ்வரி பார்வதி தேவியாகவும், சிவன் திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று காலை வைகை ஆற்றில் இருந்து அக்னி சட்டி பால்குடம் மற்றும் சக்தி கரகம் புறப்பாடு கோலாகலமாக நடந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
இன்று காலை மஞ்சள் நீராட்டு விழாவும் காலபைரவர் வழிபாடு மற்றும் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.