ADDED : மே 23, 2025 11:32 PM

கமுதி: கமுதி அருகே வடுகப்பட்டி கிராமத்தில் செல்வ விநாயகர், சுந்தர்ராஜ பெருமாள், குங்குமக் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு எருதுகட்டு விழா நடந்தது.
போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, துாத்துக்குடி,தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 காளை மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
சில வீரர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு குத்து விளக்கு, ரொக்க பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வடுகப்பட்டி கிராம மக்கள் செய்தனர்.