/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காட்டுப்பிள்ளையார் கோயிலில் பாலாலயம் காட்டுப்பிள்ளையார் கோயிலில் பாலாலயம்
காட்டுப்பிள்ளையார் கோயிலில் பாலாலயம்
காட்டுப்பிள்ளையார் கோயிலில் பாலாலயம்
காட்டுப்பிள்ளையார் கோயிலில் பாலாலயம்
ADDED : செப் 15, 2025 06:09 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் காட்டுப்பிள்ளையார் கோயிலில் ரூ.20 லட்சம் செலவில் திருப்பணிகள் பாலாலயம் பூஜையுடன் துவங்கியுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உப கோயிலான காட்டுபிள்ளையார் கோயில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளது. பழமையான இக்கோயிலில் திருப்பணிகள் துவக்கிட ஹிந்து அறநிலைத்துறை ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதன்படி கோயில் வளாகத்தில் கோயில் குருக்கள் உதயகுமார் பாலாலயம் பூஜை செய்து, தீபாராதனை நடத்தினார். இதில் கோயில் ஆய்வாளர் சிவக்குமார் கோயில் இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி கோயில் ஊழியர்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயிலில் சுற்றுச்சுரில் வாட்டர் வாஷ் செய்து எப்பாசி ரசாயன கோட்டிங் செய்து கோயில் முகப்பில் உள்ள ஓடுகளை புதுப்பித்து, கோபுரம் விமானங்களை மராமத்து செய்யும் பணி நடைபெற உள்ளது.