Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சரக்கு வாகனத்தில் நெல்லை சென்ற காளை சுறா மீன்கள் வனத்துறையினர் விசாரணை

சரக்கு வாகனத்தில் நெல்லை சென்ற காளை சுறா மீன்கள் வனத்துறையினர் விசாரணை

சரக்கு வாகனத்தில் நெல்லை சென்ற காளை சுறா மீன்கள் வனத்துறையினர் விசாரணை

சரக்கு வாகனத்தில் நெல்லை சென்ற காளை சுறா மீன்கள் வனத்துறையினர் விசாரணை

ADDED : பிப் 24, 2024 05:57 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து திருநெல்வேலிக்கு சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு காளை சுறா (புல் ஷார்க்) மீன்களை வனத்துறையினர் சோதனையிட்டனர். அவை தடை செய்யப்பட்டவை அல்ல என தெரிய வந்ததால் விடுவித்தனர்.

பாம்பனில் இருந்து தலா 200 கிலோ எடையுள்ள இரண்டு சுறா மீன்களை வாங்கி கொண்டு சரக்கு வாகனத்தில் சிலர் எடுத்துச் செல்வதாக மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் திவ்ய லட்சுமி, பிரதீப் குழுவினர் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை பாலத்தில் சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர்.

ஒரு சரக்கு வாகனத்தில் ஐஸ் பெட்டியில் 2 சுறா மீன்கள் இருந்தன. அவற்றை புகைப்படம் எடுத்து மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி விளக்கம் கேட்டனர். அவர்கள் இவை காளை சுறா (புல் ஷார்க்)மீன் வகை என தெரிவித்தனர்.

வனச்சரகர் திவ்யலட்சுமி கூறியதாவது: காளை சுறா தடை செய்யப்பட்ட பட்டியலில் இல்லாததால் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து அனுப்பினோம். புதுச்சேரி சுறா, வேல் திமிங்கல சுறா, கங்கை சுறா ஆகியவை தடை செய்யப்பட்டவை. இவ்வகை சுறா மீன்களை பிடித்தாலோ, விற்பனை செய்தாலோ 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us