ADDED : செப் 13, 2025 03:52 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார்- பரமக்குடி ரோடு கீழக்கன்னிசேரி பயணியர் நிழற்குடை அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் மின்னல் தாக்கி பழுதடைந்தது. இதுவரை சீரமைக்காததால் பயன்பாடின்றி உள்ளது.
இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.தெருவிளக்கு எரிவதால் உயர்கோபுர மின்விளக்கு இருந்தும் பயனில்லை. எனவே காட்சிப்பொருளாக உள்ளதை பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.