மழையால் கோடை விவசாயிகள் மகிழ்ச்சி
மழையால் கோடை விவசாயிகள் மகிழ்ச்சி
மழையால் கோடை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 12, 2025 11:02 PM
திருவாடானை; மழையால் கோடை நெல் விவசாயம் செய்துஇருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவாடானை அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 3:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து பலத்த மழை பெய்தது.வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் நிம்மதியடைந்தனர். தெருக்களில் தண்ணீர்தேங்கியதால் நடக்க சிரமம் ஏற்பட்டது.
*ஆர்.எஸ்.மங்கலத்தில்ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசனத்தில் கோடை நெல் சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மழையால் நிம்மதி அடைந்தனர்.
பெரிய கண்மாயில் போதிய தண்ணீர் இன்றி கோடை விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பெய்த மழை கோடை நெல் சாகுபடிக்கு ஏற்றதாக அமைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.