/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மஞ்சக்குளத்து காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மஞ்சக்குளத்து காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
மஞ்சக்குளத்து காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
மஞ்சக்குளத்து காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
மஞ்சக்குளத்து காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED : ஜூன் 12, 2025 11:03 PM
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் மேலவலசையில் உள்ள மஞ்சக்குளத்து காளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
ரெகுநாதபுரம் மேலவலசையில் உள்ள மஞ்சக்குளத்து காளியம்மன், ராக்காச்சி அம்மன், தர்ம முனீஸ்வரர், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோயிலில் 7ம் ஆண்டு பவுர்ணமி வருடாபிஷேக விழா நடந்தது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை பூஜாரி நாகநாதன் செய்திருந்தார். ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.